Header Ads



ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்

ஈரான் அரசுடன் இணைந்து செயற்படுவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஐ.நா. பொதுச்சபை உரையில் எச்சரித்தார். இதில் அவர் ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ் ஹானியை “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்” என்று விபரித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா.வில் உரையாற்றிய நெதன்யாகு, ஈரான் விடயத்தில் இஸ்ரேல் தனிமைப்பட்டு போனாலும், அது அணு ஆயுதம் தயாரிப்பதற்கு இஸ்ரேல் ஒருபோது வழிவிடாது என்று உறுதி அளித்தார்.

எனினும் நெதன்யாகுவின் உரைக்கு பதிலளித்திருக்கும் ஈரான், தமது நாடு ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க திட்டமிடவில்லை என்றும் நெதன்யாகு வின் கருத்து கடுமையாக ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறியது.

ஈரான் ஜனாதிபதி ரவ்ஹானி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு இடையில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் ஈரான் - அமெரிக்க உறவில் சுமுக நிலை ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. 

இதில் ரவ்ஹானியும், முந்தைய கடும்போக்காளர் மஹ்மூத் அஹமதி நஜாத்தும் ஒரே இலக்கை கொண்டவர்கள் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார். “அஹமதிநஜாத் ஓநாய் உடையில் இருந்த ஓநாய், ரவ்ஹானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்” என்று அவர் குற்றம்சாட்டினார்.

முன்னர் ஈரானின் தலைமை அணுப்பேச்சாளராக இருந்த ரவ்ஹானியே அந்நாடு அணு ஆயுதம் தயாரிப்புக்கான திறனை பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்த மூளையாக செயற்பட்டவர் என்று நெதன்யாகு கூறினார். tm

No comments

Powered by Blogger.