களனி கங்கைக்கு மேலாக ஆறு வழிப்பாதைகள் கொண்ட புதிய பாலம்
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
கொழும்பு களனி பாலத்தில் வாகனங்களில் நெரிசல்களைக் குறைக்கும் நோக்கில் ஆறு வழிப்பாதைகள் கொண்ட புதிய பாலம் ஒன்றை அமைக்க பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை திறக்கப்பட்டதும் களனி பாலத்தில் வாகன நெரிசல் மிகவும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஜப்பான் அரசின் உதவியில் தற்போதுள்ள பாலத்துக்கு அருகில் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதைக்கு இணைந்ததாக ஆறு வழிப்பாதைகள் கொண்ட புதிய பாலம் ஒன்று அமைக்கப்படும்.
இந்தப் பாலம் அமைக்கப்படுவதனால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது மக்களின் கருத்ததுக்களை அறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment