எகிப்திற்கான ராணுவ உதவி தொடரும் - அமெரிக்கா
அமெரிக்கா, எகிப்திற்கு ராணுவ உதவிகளை அளித்து வருகிறது. இந்நிலையில், அந்த உதவியை அமெரிக்கா நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் கெய்ட்லின் ஹெய்டன், 'எகிப்திற்கு ராணுவ உதவி நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது. எதிர்காலத்தில் எந்த விதமான ராணுவ உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆலோசனை மட்டுமே நடந்து வருகிறது. இருப்பினும், எகிப்திற்கான ராணுவ உதவி தொடரும் என அதிபர் தெளிவாக குறிப்பிட்டு்ள்ளதாக கூறினார்.
.jpg)
Post a Comment