Header Ads



மக்காவில் தீவிர பாதுகாப்பு

மக்காவில் ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பை தீவிரப் படுத்தும் வகையில் 4200 உயர் தர சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் அடுத்தவாரம் தொடங்கவுள்ளது. இக்கடமையை நிறைவேற்ற உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கடந்த மாதம் முதல் வாரத்திலிருந்து லட்சக்கணக்காண யாத்ரீகர்கள் மக்காவை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்புப் பணிக்காக சவூதி அரசு பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் இதற்காக சிறப்பு காவல், மற்றும் சிறப்பு ராணுவப் படைகளை சவூதி அரசு நியமித்துள்ளது. மேலும் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் வகையில் ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடங்களைச் சுற்றியும்  சுமார் 4200 சி.சி.டிவி கேமராக்கள்  பொருத்தப் பட்டுள்ளன.

இந்த நிலையில் மக்காவைச் சுற்றி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்ற ஆண்டைக் காட்டிலும் இவ்வருடம் சுமார் 20 சதவீத ஹஜ் பயணிகள் உலகம் முழுவதிலிருந்தும் குறைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது inne

No comments

Powered by Blogger.