குர்பான் கொடுக்கவிருந்த மாடு முட்டி ஒருவர் வபாத்
லாகூரில் இருந்து 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஹபீஸாபாத் பகுதியை சேர்ந்த முஹம்மது அக்தார் என்பவர் பக்ரீத் பண்டிகைக்கு பலி கொடுப்பதற்காக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தந்து ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கி வந்து வீட்டு வாசலில் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
அந்த காளைக்கு 15-10-2013 காலை அவர் தீனி வைத்துக்கொண்டிருந்த போது சீறிப்பாய்ந்த காளை அவரை கூரிய கொம்புகளால் முட்டி மோதி, தரையில் சாய்த்தது.
ஆவேசம் அடங்காமல் அவரை புரட்டிப் புரட்டி எடுத்ததை கண்ட உறவினர்கள் காளையிடம் இருந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குர்பான் கொடுப்பதற்காக வாங்கி வந்த காளை உரிமையாளரையே பலி வாங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
Post a Comment