பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டது
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிரடியாக கலைத்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு(பி.சி.பி.,) அரசியல்வாதிகளின் பிடியில் இருப்பதால், பிரச்னைகள் ஏராளம். பி.சி.பி., தலைவராக ஜாகா அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக இஸ்லாமாபாத் ஐகோர்ட் அதிருப்தி தெரிவிக்க, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதையடுத்து செயல் தலைவராக நஜாம் சேத்தி நியமிக்கப்பட்டார். இவருக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், இவரது அதிகாரங்களை குறைத்த கோர்ட், அக்., 18ம் தேதிக்குள் பி.சி.பி., தலைவருக்கான தேர்தலை நடத்தும்படி கெடு விதித்தது. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் சங்கங்களில் நிலவிய குழப்பம் காரணமாக, தேர்தலை நடத்த முடியவில்லை. இதையடுத்து பி.சி.பி.,யை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று கலைத்தார். நஜாம் சேத்தி தலைமையில் முன்னாள் தலைவர் ஷாரியார் கான், முன்னாள் வீரர்கள் ஜாகிர் அபாஸ், ஹாரூன் ரஷித், முன்னாள் அணி மானேஜர் நவித் சீமா அடங்கிய 5 பேர் இடைக்கால கமிட்டியை அமைத்தார். இக்கமிட்டி 90 நாட்களுக்கு அதிகாரத்தில் நீடிக்கும். இதற்குள் தேர்தலை நடத்தி புதிய பி.சி.பி., தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
.jpg)
Post a Comment