முஸ்லிம் காங்கிரஸுக்கு மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றுள்ளது.
பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ள இந்த கூட்டத்தின்போது முஸ்லிம் காங்கிரஸினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மிகக்கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அரசாஙகத்தில் இருந்துகொண்டே, அரசாங்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் விமர்சிப்பதாகவும், இந்த விமர்சனத்தை முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்திக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தாராளமாக வெளியேறலாமெனவும் இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
ஆளும்கட்சியின் பாராளுமன்ற கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவரும் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவேளை இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்துக் கொண்டிருந்துள்ளனர். அமைச்சர் பசீர் சேகுதாவூத் உடல் நலம் சரியில்லாமை காரணமாக இச்சந்திப்புகளில் பங்குகொள்ளவில்லை.
அதேவேளை ஆளும் கட்சியின் இந்தக் கூட்டத்தின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் எம்.பி.யை பெயர் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு ஒரு ஆசனம் பெற்றுக்கொடுத்தமைக்காகவே ஜனாதிபதி இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார்.
.jpg)
அப்படியானால் முஸ்லிம் காங்கிரசுக்கு 'வாழ்வா சாவா' என்ற நிலைமையா?
ReplyDeleteINTHA ATTAM POTHUMA INNUM KONCHAM VENUMA APPADI PODU PODU PODU PODU
ReplyDelete