சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாட்டில் நெனசல
(யு.எல்.எம். றியாஸ்)
மகிந்த சிந்தனையின் கிராமத்திற்கு தொழில் நுட்பம் வேலைத்திட்டத்தின்
கீழ் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பின் தங்கிய கிராமப்புற
மக்களுக்கு தகவக் தொழில் நுட்பத்தை விருத்தி செய்யும் நோக்கில் நெனசல
நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன
இதற்கமைய மல்வத்தை,கல்லரிச்சல் பொது நூல் நிலையம் மற்றும் சென்னால் கிராம சன சமூக நிலையம் ஆகிய மூன்று இடங்களில் தயட்ட கிருல அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நெனசல நிலையங்கள் இன்று (09.10.2013) வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ,எம்,எம், நௌசாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நெனசல நிலையத்தை திறந்துவைத்தார்.
வடக்கு, கிழக்கு மாகான நெனசல அபிவிருத்தி இணைப்பாளர் ஏ,அமீர், சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ,கே,கலீளுள் ரஹ்மான்,பிரதேச சபை செயலாளர் ஏ,ஏ,சலீம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Post a Comment