Header Ads



தமிழரசு கட்சி சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவே தோன்றுகின்றது - சுரேஸ் பிரேமசந்திரன்

(பா.சிகான்)

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

இன்று திடிரென ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஊடகவியலாளர் குழாமமூடன்  சந்திப்பினை மேற் கொண்ட நிலையில் இவ்வாறு கூறினார்.

அதேபோல தான் தேர்தல் பிரச்சார காலங்களில் இலங்கை அரசாங்கம் போர் குற்றம் புரிந்துள்ளது. இங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதுஇ போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்இ என பேசிவிட்டு அவர் முன்னிலையில் முதலமைச்சர் சத்திய பிரமாணம் எடுத்ததிலும் எமக்கு உடன்பாடில்லை.

எனவே தமிழரசு கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவே எமக்கு தோன்றுகின்றது.

இந்த முடிவுகள் எதிர் காலத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்களை குழப்பும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது என மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.