சவளக்கடை அர்ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் மக்களின் பாவனைக்காக
(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை பிரதேசத்தில் கடந்த கால யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட அர்ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் குவைத் நாட்டின் 40 இலட்சம் ரூபா நிதியுதவியில் புணரமைப்பு செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று வெள்ளிக்கிழமை (2013.10.25) திறந்து கையளிக்கப்பட்டது.
சவளக்கடை அர்ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.பாறூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரி சுன்னத்தில் முஹம்மதியா பொது தலைவர் என்.பி.எம்.அபூபக்கர் சித்தீக் (மதனி), பொது செயலாளர் ஏ.எல்.கலீலுல் ரஹ்மான், சவளக்கடை – மத்தியமுகாம் ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ஏ.பி.அஸ்வர் (ஹாமி), தாறுல் ஹூதா பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் எம்.ஐ.முபாறக் (மதனி), ஏ.எல்.தஸ்தீக் (மதனி) உட்பட உலமாக்கள், பொதுமக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய பிரதான குத்பா பிரசங்கத்தை எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (சலபி) நிகழ்த்தினார்.



Post a Comment