Header Ads



அம்பாறை தமிழ் பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு (படங்கள்)


(யு.எம்.இஸ்ஹாக்)

அம்பாறை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும்  தமிழ் பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் விசேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப் பட்டு பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை கல்முனை-02 அம்மன் கோவில் வீதியில் உள்ள பாழடைந்த கிணறொன்றில் இருந்து  களுவாஞ்சி குடி விசேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப் பட்ட AK-47  ரவை கூடு 02உம் ,70ரவைகளும்  கல்முனை பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது . இதே வேளை  இன்று காலை சம்மாந்துறை போலிஸ் பிரிவுக்குட்பட்ட வீர சோலை தமிழ் கிர்காமதின் காட்டு பகுதியில் புதைக்கப் பட்ட னியில் கண்டெடுக்கப் பட்ட T-56 ரக துப்பாக்கி 16உம் ,20 ரவை கூடுகளும், 60ரவைகளும்  மல்வத்தை விசேட அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டு சம்மாந்துறை பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.





No comments

Powered by Blogger.