இந்த மௌலவி ஆசிரியருக்கு அவசரமாக உதவுங்கள்
"யார் ஒரு முஃமினின் கஷ்டத்தை உலகில் நீக்குகின்றானோ, மறுமையில் ஏற்படும் அவனது கஷ்டத்தை அல்லாஹ் நீக்கிவிடுவான். தன் முஸ்லிம் சகோதரனுக்காக ஓர் அடியான் உதவிக் கரம் நீட்டுகின்ற போதெல்லாம் அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்வான்". (ஆதாரம்: முஸ்லிம்)
தென் மாகாணத்தில் வெலிகம எனும் ஊரைச் சேர்ந்த மௌலவி M.H.M. புர்கான் (பாரி) (வயது 64) இரு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ள நிலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையில் உள்ளார்.
வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக் கலாசாலையில் மௌலவிப் பட்டம் பெற்று வெளியாகிய இவர் வெலிபிடிய ஸாஹிரா முஸ்லிம் பாடசாலையில் இஸ்லாம் பாட ஆசிரியராக பல்லாண்டு காலம் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியராவார்.
வெலிகமை வாழ் முஸ்லிம்களின் நன்மதிப்பைப் பெற்ற இவர் ஐந்து பெண் மக்களின் தந்தையாவார். ஓய்வூதியத்தின் மூலம் மாத்திரம் குடும்பச் செலவுகளை சமாளிக்கும் இவரின் சத்திர சிகிச்சைக்காக சுமார் (10 இலட்சம்) 01 மில்லியன் ரூபா செலவாகுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கு விபரம்:
M.H.M. FURKAN
A/C NO: 077200140000523
Peoples Bank - Weligama Branch.
(Mob: +94774450317)



Post a Comment