Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறு பிராயத்தில் செய்த சுட்டித்தனங்கள்

(tv)

50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் வீரகெட்டியவில் உள்ள மெதமூலனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் டி.ஏ. ராஜபக்ஷ அவர்களை சந்திப்பதற்காக நான் சென்றிருந்தேன். அப்போது அவர் நெல் வயலில் இருந்தார். வீட்டுக்கு அருகில் ஒரு சிறுவன் துள்ளி விளையாடிக் கொண்டிருப்பதை நான் அவதானித்தேன். பின்னர் நான் அந்த சிறுவனை வித்யோதய பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சந்தித்தேன்.

அப்போது அந்த சிறுவனுக்கு 18 வயதிருக்கும். பல்கலைக்கழகத்தில் அவன் பணிபுரிந்து கொண்டிருந்தான். அப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த நான் இந்த இளைஞன் அங்குள்ள மாணவர்களுடனும், உத்தியோகத்தர்களுடனும் மிகவும் நெருக்கமான நற்புறவைக் கொண்டிருப்பதை நான் அவதானித்தேன். தொழிற்சங்கத்தின் தலைவன் என்ற முறையில் இந்த இளைஞர் அங்குள்ள ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடினார்.

1970ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய இந்த இளைஞன் அந்தப் பாராளுமன்றத்திற்கு மிகவும் வயது குறைந்த அங்கத்தவராக பிரவேசித்தார். 1971ம் ஆண்டு இளைஞர் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படுவதற்காக மூடப்பட்டிருந்த இப்பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்ட போது அந்த நிகழ்வில் இந்த இளைஞர் ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக கலந்து கொண்டார். கிளர்ச்சியில் ஈடுபட்ட பல இளைஞர்கள் இவரது விஜயத்திற்கு தடையும் செய்தனர். இதுபற்றிய தகவலை தெரிந்து கொண்ட பல்கலைக்கழகத்திற்கு அயலில் உள்ள கிராமத்து மக்கள் ஆத்திரமடைந்து அந்த இளைஞர்களை பல்கலைக்கழகத்திற்குள் பூட்டி வைத்து அவர்களை வெளியேற இடமளிக்கவில்லை.

இந்த விடயம் குறித்து தொலைபேசி மூலம் தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கு சென்று கிராமத்து மக்களை அமைதியாக இருக்கச் செய்து, பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களை விடுவித்தார். இன்றும் கூட இந்த சம்பவத்தை நான் மகிழ்ச்சியோடு நினைவுகூறுகிறேன். மஹிந்த ராஜபக்ஷ என்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், அமைச்சராகவும், பிரதம மந்திரியாகவும் பதவி உயர்வு பெற்றார். தனது தாய்நாட்டை பயங்கரவாத பிடியில் இருந்து ஜனாதிபதி பதவி வகித்துக் கொண்டிருந்த இவர் விடுவித்து, நாட்டு மக்களை முன்னேற்றப் பாதையில் இன்று வழிநடத்திச் செல்கிறார்.

இந்த நூலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறுவயது சம்பவங்கள் பல விவரிக்கப்படுகின்றன. இந்தக் கதைகளில் இருந்து இந்தச் சிறுவன் உண்மைக்காவும், நீதிக்காவும் தன்னை அர்ப்பணித்து நேர்மையான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இந்த நூலாசிரியர் தெனகம சிறிவர்தன. எழுத்தாளரான இவர் சர்வதேச இளைஞர் இலக்கிய விருதையும், அரச இலக்கிய விருதையும் மற்றும் கொடகே இலக்கிய விருதையும் வென்றுள்ளார்.

இவர் 120இற்கும் மேற்பட்ட சிறுவர் கதைப் புத்தகங்களையும் இளைஞர்களுக்கான புத்தகங்களையும் எழுதியுள்ளார். 23 வருடங்களுக்கும் மேல் ஆசிரியராக இருந்த இவர் இன்று ஒரு பத்திரிகையாளராகி இருக்கிறார். இந்தப் புத்தகத்தை இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் கொடுப்பது அவசியம் என்ற கருத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

பேராசிரியர் மென்டிஸ் ரோஹனதீர

இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்குமாறு என்னிடம் கேட்கப்பட்ட போது இது ஒரு புதிய பாணியில் எழுதப்பட்டிருந்ததை நான் அவதானித்தேன். இலங்கை ஜனாதிபதி மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறு பிராய கதைகளை நான் கேட்டறிந்திருக்கிறேன். 

இந்தக் கதைகள் கட்டுரை எழுதும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் இளைஞர்களுக்கு மட்டுமன்றி வயது வந்தவர்களுக்கும் உகந்தது என்று நினைக்கிறேன். 

எனது மொழி பெயர்ப்பில் இந்தக் கதைகளின் உண்மையான தாற்பரியத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.


சிங்கள மூலப்பிரதியை ஆங்கிலத்தில் 
முது பத்மகுமார
கொழும்பு, இலங்கை



No comments

Powered by Blogger.