Header Ads



நிரந்தர நியமனம் கோரி, வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


(பா.சிகான்)

நிரந்தர நியமனம் கோரி  வைத்தியசாலை தொண்டர் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை தவிர்ந்த  ஏனைய மாகாண சபை வைத்தியசாலை யில் வேதனமின்றி கடமையாற்றிய சுமார் 300 பேர் இன்று மதியம் பண்ணை பகுதில் உள்ள மாகாண சுகாதார பணிமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் பணியாளர்கள் நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத் தேர்வு கள் நடை பெற்று வரும் நிலையில் தம்மையும் சேவை அடிப்படையில் உள்ளீர்க்க வேண்டும் எனவும் வேதனமின்றி  இதுவரை காலமும் சேவை செய்த எமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இது தவிர எமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத விடத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக  அங்கு தெரிவித்தனர்.
இவர்களi மாகாண சுகாதார அமைச்சர்   சத்தியலிங்கம்  மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டெனிஸ்வரன் ஆகியோர் சந்தித்து கலந்து ரையாடினர்.

மேலும் இன்று யாழ் போதனா வைத்தியசாலை  முன்னால் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் தமது நிரந்திர நியமனத்தினை வழங்குமாறும் கோரினர்.

No comments

Powered by Blogger.