துபாயில் மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிவிட்டு பெண் தற்கொலை
அபார்ட்மென்டின் 11வது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிவிட்டு பால்கனியில் இருந்து குதித்து இந்திய பெண் தற்கொலை செய்து கொண்டார். துபாய் ஜூமிராக் கிராமத்தில் மஹாட்டன் டவர்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 11வது மாடியில் இந்திய பெண், கணவருடன் வசித்தார். தம்பதிக்கு ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று கணவனுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெண், குழந்தையை தூக்கி கொண்டு பால்கனிக்கு வந்தார். திடீரென மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிவிட்டு தானும் கீழே குதித்தார்.
இதில் உடல் சிதறி தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் துபாய் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பெண் தற்கொலை செய்து கொண் டது உறுதியானது. அவரது பெயர் விபரம், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக கணவனிடம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

Post a Comment