Header Ads



குழந்தை போல இருக்கும் 26 வயது வாலிபர்

இந்தியா - திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மேல நம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி வடுவம்மாள், கூலி தொழிலாளி. இவர்களது மகன் பாலகிருஷ்ணன் (26). இவருக்கு 6 வயதில் வந்த காய்ச்சலால் இளம்பிள்ளை வாதம் ஏற்பட்டு கை, கால்கள் மற்றும் உறுப்புகள் செயல்படவில்லை. 26 வயதான நிலையில் தனக்கு தேவையான வேலையை கூட செய்து கொள்ள முடியவில்லை. குழந்தையை போல படுத்தே கிடக்கிறார். சில நேரங்களில் விளையாட்டாக போடும் சத்தம் கூட அழுவது போன்றே தோன்றுகிறது. 

குழந்தையை போல தாய் வடுவம்மாள் தூக்கி சுமந்து வருகிறார். இதுநாள் வரை பாலகிருஷ்ணனுக்கு மாற்று திறனாளிக்கான எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக பலரிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. 'எனக்கு கிடைக்கும் வருமானத்தை கொண்டு பிள்ளையை பராமரித்து வருகிறேன். அரசு மட்டுமின்றி தனியாரும் பாலகிருஷ்ணனின் சிகிச்சைக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும்' என்று தாய் வடுவம்மாள் கண்ணீருடன் கூறுகிறார். -

No comments

Powered by Blogger.