அமெரிக்கா, சொந்த மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் குற்றவாளிகள் - தலிபான்கள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா, சொந்த மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குற்றவாளிகள் என தாலிபான் கருத்து வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தலிபான்கள் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது.
அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. அந்நாட்டில் உள்ள சுதந்திர தேவி சிலை மூடப்பட்டு விட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவால் வாஷிங்டனில் கடைகள், விடுதிகள், ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்களின் சொந்த நலன்களுக்காக கடைநிலை மக்களையும், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு எதிராகவும் அமெரிக்க அரசியல்வாதிகள் நிகழ்த்தும் விளையாட்டை, அந்நாட்டு மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். thoo

Post a Comment