Header Ads



வைத்தியரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

(nf) பதவிய ஆதார வைத்தியசாலையின் விடுதியொன்றிற்குள் வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று 14-10-2013 மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லாத நிலையில், ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு மரண தண்டனை தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் – பொதானேகம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு எதிராக 18 குற்றங்கள் காணப்படுகின்ற நிலையில், அவர் ஏற்கனவே 31 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்று இந்த கொலையை செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.