Header Ads



இலங்கையின் முதலாவது முஸ்லீம் தாதியியல் விஞ்ஞானப் பட்டத்தாரியின் பூப்படைந்த பூக்கள்

(அனாசமி)

இலங்கையின் முதலாவது முஸ்லீம் தாதியியல் விஞ்ஞானப் பட்டத்தாரியும், விரிவுரையாளரும், கவிஞருமான ஒலுவிலைச் சேர்ந்த எஸ். ஜலால்டீனால் எழுதப்பட்ட பூப்படைந்த பூக்கள் எனும் கவிதை நூல் தொகுப்பு எதிர்வரும் 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 8.15மணிக்கு ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கின்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதியமைச்சரும், முஸ்லீம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் றஊப் ஹக்கீம், கௌரவ அதிதிகளாக பாரபாளுமன்ற உறுப்பினர்களாக எம்.ரீ. ஹஸன் அலி, எச்.எம். எம். ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அட்டாளைச்சேனை பிரதேசசபையின் உதவித் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாஹ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நூல் அறிமுக உரைகளை மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.எம்.எம். அஷ்ரப், கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் வழங்கவுள்ளனர். கல்வியலாயர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், வைத்தியத்துறைசார்ந்தோர், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வினை ஒலுவில் செய்னம்பு ஹூசைமா வெளியீட்டகம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.