Header Ads



புத்தளம் வாக்குச்சீட்டு விவகாரம் - வழக்கு வாபஸ் பெறப்பட்டது

(Sfm) வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்திற்காக பதிவளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் தேர்தல் மத்திய நிலையம் ஒன்றின் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டமை குறித்த வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜனசெத்த முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த மனு செய்தித்தாள் தகவலை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

இதன்போது நீதிமன்றில் விவாதத்தை முன்வைத்த மனுதாரர் தரப்பு சட்டத்தரணி, வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் செய்தித்தாள் தகவல்கள் மாத்திரமே சாட்சிகளாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதுகுறித்து காவல்துறை அறிக்கையும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, குறித்த மனுவை மீளப்பெற்று மீண்டும் வழக்கைத் தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.