இந்நாட்டை பௌத்த மத தலைவர்களாலேயே மீட்க முடியும் - அர்ஜூன ரணதுங்க
கசினோ மூலம் நாட்டுக்கு கிடைக்க போவது வருமானம் அல்ல எனவும் அழிவே என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். நல்லெழுக்கம், கலாசாரம் போன்றவற்றின் அழிவுகளால் கிடைக்க போகும் ஆச்சரியமான அபிவிருத்தி என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பேருவளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் கவனத்தை திசைத் திருப்பவே கசினோ சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வராமல் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
பௌத்தர்கள் என்ற வகையில் கசினோ சட்டத்தை அமுல்படுத்தி, வரி சலுகை வழங்குவதை கடுமையாக எதிர்க்க வேண்டும். கசினோ வர்த்தகம் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைக்காது, அழிவே ஏற்படும்.
நாடு மிகவும் ஆபத்தான திசை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. கடந்த காலத்தில் நடந்தது போல், தற்பொழுதும் கொலைகள், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், கொள்ளைகள், மோசடிகள் என சகல குற்றச் செயல்களும் நடந்தேறி வருகின்றன.
இது மிகவும் கெடுதியான நிலைமை. இதனால் நாட்டை இந்த நிலைமையில் இருந்து பௌத்த மத தலைவர்களாலேயே மீட்க முடியும் என்றார்.
.jpg)
BBS ???????
ReplyDelete