Header Ads



வென்னப்புவயில் பணத்தை வைத்து சேவல் சண்டை நடாத்தியவர்கள் கைது

தென் ஆசியாவின் மிகப் பெரிய சேவல் சண்டை சூதாட்ட மையம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சேவல்களை சண்டையில் ஈடுபடுத்திய ஐந்து பேரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பணத்தை வைத்து சேவல் சண்டை நடாத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பண்டிருப்பு பிரதேசத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் சுற்றி வளைப்பில் ஈடுபட்ட போது வேடிக்கைப் பார்க்கச் சென்ற பலர் தப்பிச் சென்றுள்ளனர்.

சேவல்களை வைத்து சூதாடியதாக குறித்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சூதாட்ட மையத்திற்கு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்கள், மூன்று லொறிகள் இரண்டு வேன்கள், இரண்டு முச்சக்கர வண்டிகள் ஆகியன கைவிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளன.

வாகன இலக்கங்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர். தென் ஆசியாவின் மிகப் பெரிய சேவல் சண்டை சூதாட்ட மையமாக இந்த மையம் கருதப்படுகின்றது. போட்டியில் ஈடுபடுத்தப்பட்ட சேவல்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.