பிரித்தானியப் பிரதமர் இலங்கைக்கு கடுமையான செய்தியொன்றை எடுத்து வருவார் - 'தி ரைம்ஸ்'
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், இலங்கை தலைமைக்கு கடுமையான செய்தியொன்றை எடுத்துச் செல்லவுள்ளதாக, லண்டனில் இருந்து வெளியாகும் 'தி ரைம்ஸ்' நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
நொவம்பர் மாதம் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்குச் செல்லும்போதே, பிரித்தானியப பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், சிறிலங்காவின் தலைமைத்துவத்துக்கு கடுமையான செய்தியை எடுத்துச் செல்வார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க கனடா எடுத்துள்ள கடுமையான முடிவு, டேவிட் கமரூன் இந்த மாநாட்டில் பங்குபற்றுவதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட, பிரித்தானிய, வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார பணியகத்தின் பேச்சாளர், சிறிலங்காவில் மாநாட்டை நடத்துவது என்ற முடிவு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த ஆட்சிக்காலத்தில், எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தலைமைக்கு கடுமையான செய்தி ஒன்றை எடுத்துச் செல்லும் கமரூன், அதேவேளை, கொமன்வெல்த்துக்கான பிரித்தானியாவின் ஆதரவையும் வலியுறுத்துவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு, பிரச்சினையில் இருந்து ஒதுங்கிப் போவது சிறந்த வழி என்று நாம் நினைக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment