Header Ads



அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் ஆசிரியர் தினம்


(எஸ்.ஜமால்டீன்)

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் இன்று (14.10.2013) ஆசிரியர் தினம் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 

இதன்போது ஆசிரியர்கள் மாணவர்களால் அழைத்து வரப்பட்டு காலை ஆகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக மாணவர்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதன்போது ஆசிரியர் ஏ.ரீ. நகீல் யானைக்குக் கண் வைப்பதையும், ஆசிரியர்கள் மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓட்டும் போட்டியில் கலந்துகொள்வதையும், வெற்றிபெற்ற ஆசிரியர் குழுவுக்கு அதிபர் மற்றும் அதிதிகளால் எம்.சி. சர்ஜூன் ஆசிரியருக்குக் கிண்ணம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தின், கௌரவ அதிதிகளான ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. முகைதீன் பாவா, ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அபுல் ஹஸன், ஓய்வுபெற்ற இக்கல்லூரியின் அதிபர் ஏ.அப்துல் அஸீஸ் ஆகியோருடன் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துசிறப்பித்தனர். 




No comments

Powered by Blogger.