Header Ads



பிரதீபா பிரபா விருது பெற்றவர்களுக்கு கல்முனையில் கௌரவம்

(யு.எம்.இஸ்ஹாக்)

மஹிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு திட்டத்திற்கேற்ப எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய மாணவர் பரம்பரையொன்றை உருவாக்கும் முகமாக மிகப்பயன்மிக்க கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள், அதிபர்களால் ஆற்றப்படும் உன்னதமான அளவிலா சேவையைக் கௌரவித்து பிரதீபா பிரபா விருது வழங்கப்பகிறது. கல்வியமைச்சினால் மூன்றாவது தடவையாக இவ்விருதிற்கு அதிபர், ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை கல்வி வலயத்தில் இருந்து இரன்டு அதிபர்கள் உட்பட 11 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். விருது பெற்ற இவர்களை கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸீம் அலுவலகத்தில் 15-102013  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர்கள் கூட்டத்தில்  பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


No comments

Powered by Blogger.