எனக்கு மரண அச்சுறுத்தல் நிலவுகிறது - சபாநாயகரிடம் முறையிட்டார் மங்கள சமரவீர
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமானளவில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
தனக்கு மரண அச்சுறுத்தல் நிலவுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சமர்ப்பித்த சிறப்புரிமைப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாடு நடைபெறும் காலகட்டத்தில் கொலை அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளவர்கள் சிலரின் பெயர்களையும் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
useless man, no matter, no prob better get the cup,,,,,,,
ReplyDelete