தனது மனைவியை கொலைசெய்ய கத்தியுடன் பாடசாலைக்கு சென்ற அரசியல்வாதி
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரர் சாலிய திஸாநாயக்க தனது மனைவியை கொலை செய்ய கத்தியுடன் பாடசாலைக்குள் சென்று ஆவேசமாக நடந்து கொண்டதாக தெரியவருகிறது.
சாலிய திஸாநாயக்கவின் மனைவி ஹங்குராங்கெத்த சீ.சீ.பாடசாலையின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அங்கு சென்ற திஸாநாயக்க கத்தியுடன் ஆவேசமாக நடந்து கொண்டதை கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் பீதியடைந்துள்ளனர்.
சாலிய திஸாநாயக்க மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் என்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஹங்குராங்கெத்த தொகுதியின் அமைப்பாளருமாவார். பாடசாலைக்குள் கத்தியுடன் நுழைந்த சாலிய திஸாநாயக்க, பாடசாலையில் பணியாற்றும் தனது மனைவியை கொலை செய்ய தேடியுள்ளார்.
இதனையடுத்து, ஆசிரியர்கள் அவரது மனைவியை பாதுகாப்பான இடமொன்று அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் ஏற்படவிருந்த அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் திஸாநாயக்கவின் மனைவி குறுகிய கால விடுமுறை பெற்று பாடசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். எனினும் சாலிய திஸாநாயக்க கத்தியுடன் பாடசாலை வளாகத்திற்கு அருகில் சுற்றித்திரிந்தவாறு தனது மனைவியை தேடியதாக பாடசாலையின் தகவல்கள் தெரிவித்தன.
ඇමති එස්.බී. ගේ සොයොයුරා බිරිඳ මරන්න පිහියක් අරන් පාසැලට පනී
ඇමති එස්.බී. ගේ සොයොයුරා බිරිඳ මරන්න පිහියක් අරන් පාසැලට පනී
ඇමති එස්බී දිසානායක මහතාගේ සොහොයුරු සාලිය දිසානායක මහතා හඟුරන්කෙත සී.සී. විද්යාලයට පිහියක් අතැතිව ඇතුලූවි ආවේගශීලීව හැසිරිම හේතුවෙන් එම විද්යාලයේ සිසු දරු දැරියන් මෙන්ම ආචාර්ය මණ්ඩලයද දැඞ් භීතියට පත්වූ බව වාර්ථා වේ.
සාලිය දිසානායක මහතා මධ්යම පළාත් සභාවේ හිටපු සභාපති සහ හඟුරන්කෙත ශ්රි ලංකා නිදහස් පක්ෂ ආසන සංවිධානයකද වේ.
විදුහලට පිහියක් අතැතිව ඇතුලූ වි ඇති දිසානායක මහතා, එම ව්දුහලේ ගුරුවරියක ලෙස සේවය කරන ඔහුගේ බිරිද ඝාතනය කිරිම සදහා සොයා ඇති අතර, ආචාර්ය මණ්ඩලය මැදිහත්වි ඇය ආරක්ෂිත ස්ථානයකට රැගෙන යාම හේතුවෙන් සිදුවන්නට ගිය අපරාධයක් මගහැරී ගොස් ඇත.
පසුව දිසානායක මහතාගේ බිරිද කෙටි නිවාඩුවක් ලබාගෙන පාසලෙන් පිටවගොස් ඇති අතර පාසල් නිමවන අවස්ථාවේදීද සාලිය දිසානායක මහතා නැවතත් පිහියක් අතැතිව විදුහල් භූමිය අවට සැරිසරමින් ඔහුගේ බිරිද සොයා ඇති බවද විදුහල් ආරංච්මාර්ග සදහන් කරයි.
.jpg)
Post a Comment