சிகிச்சை சரியில்லாததால், டாக்டரை குத்தி கொன்ற நோயாளி
சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்தார் நோயாளி. மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் அடைந்தனர்.சீனாவில் மக்களின் நலனுக்காக சுகாதார துறை சார்பில், ஆண்டுதோறும் அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ஏராளமான டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனினும், சிகிச்சை குறைபாடு உள்ளதாக கூறி டாக்டர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள வெங்லிங் நகரத்தில் அரசு மருத்துவமனைக்கு நேற்று 33 வயதுள்ள நோயாளி ஒருவர் வந்தார். அவர் ஏற்கனவே தனது மூக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காது மூக்கு தொண்டை நிபுணரிடம் சிகிச்சை பெற்றிருந்தார்.
அவர் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி சண்டையிட்டார். அங்கு பணியில் இருந்த மற்ற டாக்டர்கள் சம்பந்தபட்ட டாக்டர் தற்சமயம் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நோயாளி, அங்கிருந்த டாக்டரை சரமாரியாக கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே டாக்டர் பலியானார். அதை பார்த்து நர்ஸ்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். நோயாளியை தடுக்க முயன்ற 2 டாக்டர்களுக்கும் கத்தி குத்து விழுந்தது. அதன்பின் காவலாளிகள் அந்த ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
டாக்டரை குத்திக் கொன்றது ஏற்றுக் கொள்ளப் பட முடியாததது.
ReplyDeleteஎனினும், இலங்கையிலும் அதிகமான டாக்டர்கள் நோயாளிகளுக்கு முறையான, சரியான, தேவையான சிகிச்சையை அளிப்பதில்லை.
நோயாளிகளை வைத்து காசு பார்க்கின்றனர். மருந்துக் கொம்பனிகளின் வருமானத்திற்காக தேவையில்லாத மருந்துகள், சப்ளிமென்ட் வானச் சொல்லி, அதன் மூலம் கொமிசன் பணம் பெறுகின்றனர்.
தற்பொழுதுள்ள வைத்தியர்கள், குறைந்த நேரத்தில், கூடுதல் நோயாளர்களை பார்த்து, அதிக பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர். நோயாளியுடன் விரிவாக உரையாடி, நோயின் சரியான நிலையை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இது நான் சொல்வது, தனியார் மருத்துவமனை வைத்தியர்களின் நிலைமை. அரசாங்க இலவச மருத்துவமனை வைத்தியர்களின் நிலைமை இதை விடவும் மோசமாக இருக்கலாம்.
வைத்தியர்கள் மேற்கொள்ளும் முறையற்ற சிகிச்சை, ஏமாற்று போன்றவற்றிட்கு எதிராக கடுமையான சட்டங்கள் இலங்கையிலும் கொண்டுவரப் படல் வேண்டும்.