இலங்கைக்கான சூடானிய உயர்ஸ்தானிகராக கலாநிதி ஈ.எல்.தாலிப் நியமனம்
இலங்கைக்கான மூன்று நாடுகளின் புதிய உயர்ஸ்தானிகர்கள் இன்று 24-10-2013 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
சூடானிய உயர்ஸ்தானிகரான கலாநிதி ஈ.எல்.தாலிப், மொசம்பிக் உயர்ஸ்தானிகர் போசோ மரியா டி சில்வா வெய்ரா, உகண்டா உயர்ஸ்தானிகர் எலிசபத் போலா ஆகியோர் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.

Post a Comment