Header Ads



இறந்த கணவருக்காக சண்டைபோடும் 2 மனைவிகள்

இறந்த கணவரின் சடலத்தைக் கோரி 2 மனைவியர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இதனால், சடலத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் பிரதே பரிசோதனை நடாத்திய அதிகாரிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் எனது கணவர் என இரண்டு பெண்களும் தெரிவித்துள்ளதுடன், திருமணப் பதிவுச் சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

அண்மையில்  கம்பஹா பிரதேசத்தில் வெலிவேரிய நகரிற்கு அருகாமையில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த குறித்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

35 வயதான குறித்த நபர் தமது கணவர் என இந்த இரண்டு பெண்களும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் 2004ம் ஆண்டிலும் இந்த ஆண்டிலும் இரண்டு பதிவுத் திருமணங்களை செய்து கொண்டுள்ளார். இரண்டு மனைவியரும் சடலத்தைப் பொறுப்பேற்றுக் கொள்ள கம்பஹா வைத்தியசாலைக்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதியில் சடலத்தை உயிரிழந்தவரின் தந்தையிடம் ஒப்படைக்க இரண்டு தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இறுதிக் கிரியைகளின் போது குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என பிரேதப் பரிசோதனையாளர் குறித்த பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.