Header Ads



முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான வியாபார நிலையமொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது (படங்கள்)

(முஹம்மது நியாஸ்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மகாத்மா காந்தி சதுக்கத்தில் பல வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையமொன்று இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் சுமார் பத்துக்கும் அதிகமான கையடக்கத்தொலை பேசிகளும் மேலும் பல பெறுமதியான பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. வியாபார நிலையத்தின் கூரைப்பகுதி உடைக்கப்பட்டே இக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி வர்த்தக நிலையம் ஏற்கனவே இரண்டு முறை கொள்ளையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போலிஸ் நிலைய பொலிசார் மேற்கொள்கின்றனர்.



No comments

Powered by Blogger.