ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை - ஜனாதிபதி மகிந்தவின் முக்கியத்துவமிக்க கருத்துக்கள்
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தி மற்றும் சித்தியடையவில்லை என்ற தெரிவிக்கப்படுவதை உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறை சுமங்களா மகளிர் வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த முறை புலமை பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களை ஒப்பிட்டு, பரிட்சையில் தமது பிள்ளைகள் சித்திபெற தவறி விட்டதாக கருதி பெற்றோர் அழுத்தம் கொடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையல் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து சிறுவர்களை உடன் காப்பாற்ற விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் தகவல்களை நம்ப வேண்டாம். பேஸ்புக் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது. பேஸ்புக் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும் வழிகளில் தடை செய்ய முடியும்.
பௌத்த சிறுமிகள் நாட்டின் எதிர்காலமாக கருதுகின்றேன். பேஸ்புக் மோகத்தில் வாழ்க்கயை வீணாக்கிவிடக் கூடாது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இளைய தலைமுறை செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment