Header Ads



காட்டு யானையின் தாக்குதலில் வபாத்தான மாணவனின் ஜனாஸா மீட்பு (படங்கள்)


(அபூ பயாஸ்)

மட்டக்களப்பு ,உறுகாமம்,மஞ்சாடிச்சோலை எனும் காட்டுப்பகுதியில் உறுகாமம் சுபைர் ஹாஜியார் வித்தியாலய ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும்  ஜமீல் தஸ்லீம் என்ற மாணவன் யானையின் தாக்குதலுக்குள்ளாகி இன்று மரணமானார்.

இச் சம்பவம் (12-10-2013) சனிக்கிழமை 11.30  மணியளவில் இடம்பெற்றுள்ளது. உறுகாமம் குளப்பகுதியின் மறுமுனையில் மஞ்சாடிச்சோலை எனும் வனப் பகுதி உள்ளது.

இங்குள்ள மஞ்சாடிச்சோலை ஒலியுல்லாஹ் என்ற இறைநேசரின் சியாரத்துக்கு சென்று மழை வேண்டி பிரார்திப்பதற்காக சென்ற குழுவினருடன் இம்மாணவனும் சென்றுள்ளார்.

அப்போதே இவ்வனப்பகுதியில் மறைந்திருந்த யானையின் தாக்குதலுக்குள்ளாகி இம்மாணவன் மரணித்துள்ளார்.கரடியனாறு பொலிசாரின் அறிவித்தலின் பேரில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி கௌரவ வீ.வினோபா இந்திரன் அவர்களின் உத்தரவுக்கமைய இஸ்தலத்துக்கு சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள் மரணவிசாரணையை மேற்கொண்டார். செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சடலம்,பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மட்டக்களப்பு வனத்திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சமூகமளித்திருந்தனர்.




2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    மலை தேடி பிராத்திக்க மார்க்கம் சொன்ன வழிகளை விட்டு விட்டு காட்டுக்குள்ளே யர்ரயொ கப்ர் இருக்காம் அது அவ்ளியாவாம் அவர் மலை தருவாறாம் என்று மக்களை வழி கெடுத்து ஒரு பிஞ்சு குழந்தையை இன்று பறிகொடுத்து நிற்கிறது ஒரு குடும்பம் .மன வேதனை இஸ்லாம் மலை தேடி பிராத்திக்கும் முறையை தெளிவாக சொல்லியும் இது புரியாத ஒரு சில மார்க்க மேதைகள் என்று சொல்ல கூடிய மடையர்கள் இந்த சமூகத்தை அறியா பாதையின் பக்கம் வழி நடாத்துகிராகளே இவர்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டாமா? மரணித்தவர் அவரால் என்ன பண்ண முடியும் ??? சற்று மார்கத்தை படிக்குமாறு சிந்திக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறேன் . யானை சிறுவனை தாக்கும் பொது அந்த அவ்லியா எங்கே சென்றார்?

    ReplyDelete
  2. Inimel aawadu inda haram sheyalai sheiia wendam malay wendi allah widam udavi koraamal sheida pawaththukku allah dandanayi koduthu wittan inimel aawadu jaakiradayi muslim kale

    ReplyDelete

Powered by Blogger.