90 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பிள்ளைகள்
சவுதி அரேபியாவில், 90 வயது தந்தைக்கு, அவரது பிள்ளைகள், மறுமணம் செய்து வைத்துள்ளனர். சவுதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசிப்பவர் பதிஸ் அல் தகாபி, 90. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவரது மனைவி, சமீபத்தில் காலமானார். அவர் உயிரோடு இருந்த போதே, கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், தகாபி மறுத்து விட்டார்.
தகாபிக்கு, ஏழு மகன்களும், ஐந்து மகள்களும் உள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தைக்கு இவர்கள், இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக, குழந்தை இல்லாத, 53 வயது, விதவையை தேர்வு செய்து, தந்தைக்கு மணம் முடித்துள்ளனர்.
தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக, ஐந்து மகள்களும் தெரிவித்துள்ளனர். இந்த திருமணத்தில், ஏராளமான உறவினர்கள் பங்கேற்றனர்.

வலிமாக்கு விரும்பின எல்லாரும் வரலாம்
ReplyDeleteநன்றி
தாயின் கனவை நனவாக்கிய தவப்புதல்வர்கள்......?? இது ஒன்றும் சவுதிஅரேபியர்களுக்கு புதிததல்ல. இவராவது 90 வயதில் 56 வயதை தேடிப்பிடித்துள்ளார். மாறாக 90 வயதில் களைத்தேடுபவர்களே இந்த நாட்டில் அதிகம். இதற்கு இந்த நாட்டுச்சட்டங்கள் வெகுவாக அலட்டிக்கொள்வதில்லை. எது எப்படியாயினும் 'வாழ்க மறுமணத்தம்பதிகள்'
ReplyDeleteஇவன் எவ்வளவோ பரவாயில்லை. நிச்சயம் இந்தக் கிழவனைப் பாராட்டியே ஆக வேண்டும், எதற்காக என்றால், தனக்கு 12 வயது சிறுமி மணமகளாக வேண்டும் என்று தேடி திருமணம் செய்யாமல் விட்டதற்கு.
ReplyDelete