கஷ்மீரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கட்டவிழ்த்துவிடப்படும் இந்திய மிருகத்தனம்
(லதீப் பாரூக்)
'எண்ணெயில் பொறிக்கப்பட்ட பறவையொன்று கஷ்மீரிற்குக் கொண்டு வரப்பட்டால்- அது உயிர்பெறுவது ஒரு புறம்- மீணடும் தன் இறக்கைகளோடு காற்றில் அது மிதந்து செல்லும்' (பாரசீகக் கவிஞர் உர்பி ஷிராஸ்)
முத்துக்களில் அமர்ந்திருக்கும் மரகதம், ஆசியாவின் ஆபரணம், பூலோக சுவர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் பிரதேசம் கஷ்மீர். வனப்பான கஷ்மீரின் இயற்கை அழகு எவரையும் வசீகரிக்கத்தக்கது.
முகலாயப் பேரரசின் நிறுவுனர் ஸஹீருத்தீன் ஷா முதன் முறையாக கஷ்மீருக்கு விஜயம் செய்த போது, உலகத்திலேயே சுவர்க்கம் ஒன்று இருக்குமென்றால், அது கஷ்மீர்தான்' என்று குறிப்பிட்டார். பனி படர்ந்த மலைகள், மலர்ப்படுக்கைகள், கண்ணைக் கவரும் பசுமை வண்ணக் காடுகள், குளங்கள், நீரோடைகள்.... இவ்வாறு இயற்கை எழில் சூழ்ந்த கஷ்மீர் மக்களுக்கு, நிம்மதியான வாழ்க்கை கிடையாது என்பது எத்துனை துயரமானது!
இயல்பில் அமைதியை விரும்புபவர்களாகத்தான் கஷ்மீர் மக்களும் இருந்தார்கள். ஒன்றன் பின் ஒன்றாக கஷ்மீர் மீது ஆதிக்கம் செலுத்திய வெளிநாட்டு சக்திகள், கஷ்மீர் மக்களை அடக்கி, அதன் வளங்களைச் சூறையாடினார்கள். கஷ்மீர் மக்களுக்கு எதிராக பிரித்தானியர் மேற்கொண்ட மிக மோசமான ஏமாற்று நடவடிக்கை 1846 இல் நடந்தேறியது. 7.5 மில்லியன் ரூபாய்களுக்கு ஜம்மு காஷ்மீர், ராஜா குலாப் சிங்க் என்பவருக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பான்மையான கஷ்மீரியர்கள் முஸ்லிம்களாக இருந்தமையால், ஹிந்து ஆட்சியாளர் ஒருவர் தம்மை நிர்வகிப்பதை அவர்கள் விரும்பவில்லை. தனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த கஷ்மீரியர்களின் எழுச்சியை, பிரித்தானியரின் உதவியோடு ராஜாவின் இரும்புக் கரங்கள் மூர்க்கமாக அடக்கின.
இதன் போது இரண்டு இலட்சம் பேர் கொலை செய்யப்பட்டார்கள். மூன்று இலட்சம் பேர், ராஜாவின் நிர்வாகத்திற்குள் வராத இன்றைய பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் காஷ்மீர் பகுதிக்குத் தப்பியோடினார்கள்.
தொடர்ந்து முஸ்லிம் மக்களைக் கொடுமைப்படுத்துவது ராஜாவின் பொழுதுபோக்காக மாறுகிறது. மனிதர்களின் தோல்களை உயிரோடு உரிப்பதும் இவற்றில் ஒன்று. மகாராஜாவின் இம்மோசமான ஒடுக்குமுறையைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவரது பிரதம மந்திரியாக இருந்த அல்பியோன் பன்னார்ஜி பதவி துறந்தார். பெறுமதியற்ற கால்நடைகளை நடாத்துவது போன்றுதான், ராஜா முஸ்லிம்களை நடத்தியதாக அவர் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
மகாராஜாவின் கொடுமைகளை உலகின் காதுகளில் எத்தி வைப்பதற்கான எந்தவிதமான ஊடகமும் அன்று இருக்கவில்லை. மக்களது பொருளாதார நிலையும் மிகக் கவலை தருவதாக இருந்தது. 1947 இல் இந்திய பாகிஸ்தான் பிரிவிணை வரை இந்நிலை தொடர்ந்தது.
மீண்டும் கஷ்மீர் மக்களின் விருப்பு வெறுப்புகளைப் புறம் தள்ளிவிட்டு, கஷ்மீரை மகாராஜா தன்னிச்சையாக இந்தியாவோடு இணைத்தார். அதிலிருந்து இன்று வரை கஷ்மீர் பிரச்சினை முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. பல ஆண்டு காலமாக அரசியல் ரீதியாக சந்தித்து வந்த ஏமாற்றம், நம்பிக்கை அளிக்காத புதுடில்லியின் அரசியல் அணுகுமுறைகள், 1989 இலும், 1996 இலும் இடம்பெற்ற தேர்தல் குளறுபடிகள், வறுமையும், பொருளாதாரப் பிரச்சினைகளும் என பல்வேறு காரணிகள் 1989 இல் கஷ்மீர் மக்களின் மற்றொரு எழுச்சிக்கு வித்திடுகிறது. கஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமானதொரு திருப்பு முனையை அது ஏற்படுத்தி விடுகிறது.
கஷ்மீர் மக்களின் குரல் வலைகளை நசுக்குவதற்காக பல்வேறு பட்ட வன்முறைகளை புதுடில்லி அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டது. கஷ்மீர் மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு சட்டங்கள், எவரையும் கைது செய்வதற்கும், மிக மோசமான தடுப்பு நிலையங்களில் வரையறையற்ற வகையில் தடுத்து வைப்பதற்கும், மோசமாகச் சித்திரவதை செய்து, கொலைகளைப் புரிவதற்கும் எனப் பல்வேறு விடயங்களுக்கும் இந்திய இராணுவத்திற்குப் பூரணமான பச்சைக் கொடியைக் காட்டுகின்றன. இத்தனைக்கும் அவர்கள் புரிந்த ஒரே குற்றம், தமக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரியமைதான்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்தே, கற்பளிப்பு என்பது இந்திய இராணுவம் மேற்கொண்ட அழிவு நடவடிக்கைகளின் தவிர்க்க இயலாத கூறாக இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பில் சுதந்திர ஊடகவியலாளர் சிலரும், மனித உரிமை அமைப்புக்கள் சிலவும் தெரிவித்திருந்த கருத்துக்கள் சிலவற்றை இங்கு வழங்குகின்றோம்.
கஷ்மீரில் இந்திய இராணுவத்தின் பரந்து பட்ட கற்பளிப்புகளை நிறுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒரு சில நடவடிக்கைகளை மாத்திரமே எடுத்திருக்கின்றன. உறுதியாகச் சொல்வதானால், சாட்சிகளின் கற்பளிப்பிற்கான ஆதாரங்களின் நம்பகத்தன்மை தவறானது எனக் குற்றம் சுமத்துவது, மருத்துவர்களின் வாக்குமூலங்களை அவமதிப்பது, முழுமையான விசாரணை ஒன்றை நடாத்தி, கற்பளிப்பிற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, குற்றச்சாட்டுகளை இலகுவாக மறுப்பது என்ற ரீதியில், தொடர்ந்தேச்சையாக அதிகாரிகள் செயற்பட்டு வந்துள்ளார்கள்' (யுளயை றுயவஉh யனெ Phலளiஉயைளெ கழச ர்ரஅயn சுiபாவளஇ ஆயல 09இ 1993).
'1990 ஜனவரி முதல், இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கற்பளிப்புக்கள் அடிக்கடி நிகழும் நிகழ்வுகளாக மாறியுள்ளன. தேடுதல் நடவடிக்கைகளின் போதுதான் இவை பெரும்பாலும் நடந்தேறுகின்றன. அவர்களது வீடுகளை சோதனையிடும் போது, பார்க்ஸ் மற்றும் பாடசாலைகளில் ஆண்கள் அடையாளத்திற்காகத் தடுத்து வைக்கப்படுகிறார்கள். இக்கற்பளிப்புக்களின் போது, முழு சமூகத்தையும் தண்டிக்க முனைவதோடு, வெட்கமடையச் செய்யவும் இராணுவத்தினர் முனைகின்றனர்' ('Pயin in முயளாஅசை: யு ஊசiஅந ழக றுயச' ளைளரநன தழiவெடல டில யுளயை றுயவஉh யனெ Phலளiஉயைளெ கழச ர்ரஅயn சுiபாவளஇ ஆயல 09இ 1993)
'டீ.வி கமராக்களையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புக்களையும் தடை செய்வதன் மூலம், இந்திய அதிகாரிகள், கஷ்மீரைச் செய்திகளுக்கு வெளியே வைத்துக் கொள்வதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள்'. (ஹமுயளாஅசைi உசளைளை யவ வாந கடயளா pழiவெ'இ வுhந றுயளாiபெவழn வுiஅநளஇ டில உழடரஅnளைவ ஊழசன ஆநலநசஇ யுpசடை 23இ 1993)
'பெப்ரவரி 23, 1991 அன்று, குறைந்த பட்சம் 23 பெண்கள், (கஷ்மீர் குனான் புராவில்) தமது வீட்டில் வைத்து துப்பாக்கி முனையில் கற்பளிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் கூட்டுப் படுகொலைக்கு உட்பட்டிருப்பதாகவும், சிலர் தமது பிள்ளைகளுக்கு முன் கற்பளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது... பாதிக்கப்பட்ட்வர்களில் மிகவும் வயது குறைந்தவர் மிஸ்ரா என்ற 13 வயதான சிறுமியாவார். வயது முதியர்ந்தவர், ஜானா என்ற எண்பது வயதான பெண்ணாவார்' (யுஅநௌவல ஐவெநசயெவழையெட, ஆயசஉh 1992).
ஆகஸ்ட் 4, 1991 அன்று கஷ்மீர் கொடுமைகளைக் குறிப்பிட்டு, லண்டனைத் தளமாகக் கொண்ட கார்டியன் பத்திரிகை பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது. '1991 இல் கஷ்மீரிற்கான தனது விஜயத்தைத் தொடர்ந்து பிரதமர் ராஜீவ் காந்தி புதி டில்லியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் 'கஷ்மீரை இந்தியா இழந்திருக்கக் கூடும் என்றிருக்கின்ற நிலையில், இந்திய இராணுவம் மற்றும் பொலிஸாரின் முரட்டுத்தனம் அர்த்தபூர்வமானதே' எனத் தெரிவித்திருந்தார்'.
1989 எழுச்சி இடம்பெற்று இருபது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இந்திய மத்திய அரசு ஒரு போதும், அலட்டிக் கொண்டது கிடையாது. காங்கிரஸ் அரசாங்கம் அல்லது பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் என இதில் வித்தியாசம் எதுவுமில்லை. வன்முறை வழிமுறைகளில் இந்தியாவை 'ஹிந்து ராஜ்' ஆக்குவதற்கு முயல்கின்ற ஆர்.எஸ்.எஸ் போன்ற ஹிந்துத்துவ அமைப்புக்களைப் பகைத்துக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. எனவே, கஷ்மீரைத் தமது கட்டுப்பாட்டின் கீழாகவே வைத்துக் கொண்டு, அது ரத்தக் காடாகி அழிந்து கொண்டிருப்பதை அவர்கள் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் சிவில் சேவை அமைப்புக்களில் ஒன்றான 'Pநழிடந'ள ருnழைn கழச னுநஅழஉசயவiஉ சுiபாவ (Pருனுசு) பின்வருமாறு குறிப்பிடுகிறது.
'மீடியாக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றமை கஷ்மீரில் ஒரு புதிய விஷயமல்ல. இந்திய மீடியாக்களும் இது தொடர்பில் செய்தி வெளியிடுவதில்லை. உண்மையில், கஷ்மீர் தொடர்பில் அவர்களது கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம் என்பவை மீறப்படுவது பற்றி அமைதி காப்பதாகவும், பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் இந்திய மீடியா வொட்ஸ்கள் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன.
கஷ்மீர் நெருக்கடியோடு தொடர்பான மற்றொரு தரப்பான பாகிஸ்த்தான் ஊழல் மலிந்த அதன் அரசியல் வாதிகள் காரணமாக பல்வேறு உள்வீட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. ஆஸிப் அலி ஸர்தாரியின் காலத்தில் கஷ்மீர் விவகாரம் கிட்டத்தட்ட தூசு தட்டிக் கிடந்தது.
நவாஸ் ஷரீஃபின் அண்மைய தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கஷ்மீர் விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்க்கத் தூவங்கியுள்ளது. ஒபாமாவோடும் இது தொடர்பாக அவர் கலந்துரையாடியுள்ளார். கஷ்மீர் விவகாரம் தொடர்பில் உறுப்படியாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக் கூடிய அரசியல் தலைமையும் முஸ்லிம் உலகில் இல்லாத நிலையில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ, அல்லது எந்தவொரு மேற்குலக சக்தியோ ஒரு துரும்பைக் கூட இதுவரை அசைத்ததில்லை.
1957, ஜனவரி, 24 ஆம் திகதி ஐ.நா பாதுகாப்புச் சபை, ஜம்மு மற்றும் கஷ்மீர் பிரதேசங்களில் ஐ.நா கண்காணிப்பின் கீழ் சுயநிர்ணய உரிமை வாக்கெடுப்பொன்றை நடாத்துவதன் ஊடாகவே அப்பிரதேசம் தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. கஷ்மீர் தொடர்பில் ஐ.நாவினால் கொண்டு வரப்பட்ட சகல தீர்மானங்களும் இன்று தூசு தட்டிக் கிடக்கின்றன.
1947 ஒக்டோபரில் மகாத்மா காந்தி 'பாகிஸ்தானோடு சேர்வதற்கு கஷ்மீர் மக்கள் பிரியப்படுவார்கள் என்றிருப்பின், உலகத்தில் இருக்கின்ற யாதொரு சக்தியும் அவர்களைத் தடுத்து விட முடியாது. முடிவு அவர்களிடமே விட்டு விடப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இன்றிருப்பது மகாத்மா காந்தியின் அகிம்சை இந்தியா அல்ல. இது முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவ இந்தியா.
அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தின் மீது தனது அரசியல் பயணத்தை அமைத்துக் கொண்ட தலைவர்களுள் ஒருவர் அத்வானி. அவரது ரத் யாத்ரா முஸ்லிம் விரோத மனநிலையைத் தூண்டி விட்டதன் விளைவாக ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் உச்ச கட்டமாக இவரது தலைமையில் ரவுடிக் கும்பலொன்று 500 ஆண்டுகள் பழமையான பாபரி மஸ்ஜிதைத் தரைமட்டமாக்கினார்கள்.
அத்வானியின் அதே பாதையில் பயணிப்பவர்தான் நரேந்திர மோடி. ஆண், பெண், சிறுவர், வயோதிபர் என்ற வேறுபாடின்றி சுட்டு பொசுக்கியவர் மோடி. அவரது அடியாட்களில் பலர் கூட்டுக் கற்பளிப்புக்களிலும் ஈடுபட்டார்கள். சண்டாளன் இன்றும் குஜ்ராத்தின் முதலமைச்சராக இருக்கிறான். பிரதமர் பதவிக்கு வேறு போட்டியிட இருக்கிறான். இவர்கள்தான் இன்றைய இந்தியத் தலைவர்கள். எனவே, கஷ்மீர் நெருக்கடிக்கு இவர்களிடம் இருக்கின்ற தீர்வு என்ன என்பது அனுமானிக்க முடியாததல்ல.
யுடட Pயசவநைள ர்ரசசலையவ ஊழகெநசநnஉந தருகின்ற தகவல்களின் படி, அஸாத் மற்றும் ஜம்மு கஷ்மீர் பகுதிகளில் 2013 செப்டம்பர் வரை, 93935 காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். 105982 வீடுகளும், கடைகளும் அழிக்கப்பட்டுள்ளன. 107461 சிறுவர்கள் அநாதையாக்கப்பட்டுள்ளனர். 10065 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். 22772 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆயிரக் கணக்கான காஷ்மீரிகள் காணாமல் போய் உள்ளனர். ஜம்மு கஷ்மீர் மாநில மனித உரிமை ஆணைக் குழுவின் விசாரணைகளில் வடக்கு கஷ்மீரில், 38 இடங்களில் அடையாளமிடப்படாத புதை குழிகளில் இருந்து, 2730 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. குறைந்த பட்சம் இவற்றில் 574 சடலங்கள் உள்ளூர் கஷ்மீர்வாசிகளுடையவை என அடையாளம் காணப்பட்டன.
சட்டச் செயன்முறைக்குப் புறம்பான நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை இட வேண்டிய ஐ.நா விசேட அதிகாரி கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'இராணுவப் படைகளுக்கான விசேட அதிகார சட்டம், அளவுக்கு மீறிய அரச அதிகாரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. ஜம்மு மற்றும் கஷ்மீர் பகுதிகளில் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கும் இது காரணமாகியுள்ளது. கஷ்மீர் பிரதேசத்தில் இருந்து இச்சட்டத்தை நீக்குவதற்கு உலக நாடுகள் அழுத்தத்தை வழங்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாக விடுதலை சார்பான கஷ்மீர் தலைமைத்துவம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இவை அனைத்தும் இடம்பெறுவது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியாவில்தான். இந்நிலையில், மோடி பிரதமராக மாறுவார் என்றால், நிலமை என்னவாக இருக்கப்போகிறது? அனைத்துக்கும் மேலாக நிற்கின்ற மற்றொரு கேள்வி இருக்கிறது. வேதங்கள் மற்றும் அகிம்சை என்பவற்றில் நம்பிக்கை கொண்ட இந்தியர்கள் எங்கு போய் விட்டார்கள் என்பதே அக்கேள்வியாகும். a

Post a Comment