அமெரிக்க பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மலாலா எழுதிய புத்தகம் அறிமுகம்
அமெரிக்காவின், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதிய புத்தகத்தை, பாடத்திட்டமாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பள்ளி சிறுமி, மலாலா, கடந்த ஆண்டு, சுடப்பட்டார். லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மலாலா, சாவின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தார். தற்போது லண்டன் பள்ளியில் படிக்கிறார்.
தன்னுடைய முயற்சிகள், தான் சந்தித்த தடைகள் குறித்து, ஐ ஆம் மலாலா என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார். தற்போது இந்த புத்தகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், பாடத்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மலாலா எழுதிய புத்தகத்தை பாடமாக மட்டும் கற்பிக்காது, எந்த பிரச்னைக்காக மலாலா போராடினாரோ, அதை மாணவர்களுக்கு புரிய வைப்போம், என, உலக பெண்கள் அமைப்பின் தலைவர், மேரி இல்ஸ்பர்க் கூறியுள்ளார்.
இதுகுறித்து மலாலா கூறியதாவது:பேய்களைக் கண்டு பயந்தாலும், தலிபான்களைக் கண்டு பயப்படவில்லை; என்னுடைய உலகத்தை மாற்றினாலும், நோக்கங்களை மாற்ற முடியாது.பள்ளிக்கு செல்லும் பெண்கள், பயங்கரவாதத்தை விரும்புவதில்லை, நான் பாகிஸ்தான் பிரதமரானால், ஒவ்வொரு பெண் குழந்தையையும் பள்ளிக்கு அனுப்புவேன். இவ்வாறு மலாலா கூறினார்.
Post a Comment