மாணவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 60 வயது பௌத்த துறவிக்கு கடூழிய சிறை
பாடசாலை மாணவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அனுராதபுரத்தைச் சேர்ந்த 60 வயதான பௌத்த துறவிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கெபிதிகொல்லாவ பகுதியிலுள்ள துறவிக்கு எதிராக சட்டமாஅதிபர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தபோதே, வடமத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, குற்றவாளிக்கு 02 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதவான், தீர்ப்பை பத்தாண்டுகள் ஒத்திவைத்தார்.
இதனைத்தவிர பாதிக்கப்பட்ட மாணவருக்கு 75 ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி வாகல்கட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பௌத்த துறவி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
.jpg)
ஏன் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு வழங்க வேண்டும்? உடனே அமுலுக்கு வரும் தீர்ப்பை வழங்க வேண்டும் .மதத்தின் பெயரால் துறவி என்று பொய் சொல்லிக்கொண்டு ,மத போதகர் என்று வெளி உலகத்துக்கு காட்டி எல்லாவற்றையும் அனுபவிப்பது உள்ளால இருந்துட்டு எல்லா கேட்டவேலையும் செய்வது இவனுக்கல்லாம் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் .அப்பதான் மற்றவர்கள் இதுமாதிரி வேலைகள் சய்யமா ட்டர்கள்.60 வயசில பேரன் பேத்தியோட வாழவேண்டிய கிழட்டுப்பயல் .தண்டனை போதாது .எந்த மதத்தவனாக இருந்தாலும் இப்படிப்பட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை அல்லது கடுளிய ஆயுள் சிறை தண்டனை வழங்க வேண்டும் .
ReplyDeleteபல பௌத்த துறவிமார் மதத்தை காக்க ஆயுதம் ஏந்தி போராடவும் தயார் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் பல பிக்குமார் பாலியல் குற்றசாட்டில் கைது செய்யபடுகின்றனர்.....அவர்கள் இதை தான் ஆயுதம் ஏந்தி போராடுதல் என்று விளங்கி வைத்துள்ளார்களோ ?????
ReplyDeleteஅவரவர்களின் ஆயுதங்களை ஏந்துகின்றனர். புரியவில்லையா????
ReplyDelete