சிறந்த காலம் உதயமாகியுள்ளது - கோத்தபய ராஜபக்ஷ
நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் நிபுணர்களுக்கும் சிறந்த காலம் உதயமாகியிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 24-10-2013 இன்று இடம்பெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய பொறியியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியுடன், மாற்று வாய்ப்புகள் பல அனைத்து துறைகளிலும் உருவாகியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் மற்றும் யுத்த சூழ்நிலை அற்ற நிலையில் நாட்டில் உள்ள வாய்ப்புகளை பயன்பத்திக்கொள்ள வேண்டும்.
பொறியியலாளர்கள் நாட்டின் மேம்பாடு குறித்து முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். sfm

Post a Comment