Header Ads



மலை சிகரத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 49 பேர் பலி

தென்கிழக்கு பெருவில் உள்ள லா கன்வென்சியன் மாகாணத்தின் மலைப்பாதை வழியே சென்ற லாரி பாதாளத்தில் கவிழ்ந்த விபத்தில் 12 குழந்தைகள் உள்பட 49 பேர் பலியாகினர்.

விழாவுக்கு சென்ற 50க்கும் மேற்பட்டவர்கள் ஏற்றிச்சென்ற அந்த லாரி சுயுகுயோ நகர் அருகே உள்ள மலை சிகரத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதாளத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரியின் டிரைவர், அவரது மனைவி, குழந்தைகள் உள்பட 49 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்து நிகழ்ந்தபோது டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பெருநாட்டில் பல சாலைகள் கரடுமுரடான மலைபாதையில் அமைந்துள்ளதாலும், சரியான பராமரிப்பு இல்லாத வாகனங்கள் மற்றும் போதுமான அனுபவமற்ற டிரைவர்களாலும் சாலை விபத்துகள் சர்வசாதரணமாகி விட்டன.

அந்நாட்டின் போக்குவரத்து துறை கடந்த ஆண்டு வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி 2012ல் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.