Header Ads



யுத்த விமானங்களை இலங்கைக்கு வழங்கும் பாகிஸ்தான் - பாகிஸ்தானின் 2 யுத்த கப்பல்கள் இலங்கை வந்தன

பாகிஸ்தான் மற்றும் சீனா கூட்டிணைந்து தயாரித்துள்ள ஜே.எப்.17 யுத்த விமானங்கள் இலங்கைக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. பாகிஸ்தானின் த நேசன் நியுஸ் செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்த யுத்த விமானத்தை உற்பத்தி செய்திருந்தன. இந்த யுத்த விமானம் அதிக எண்ணிக்கையான ஏவுகனைகளையும், குண்டுகளையும் சுமந்து சென்று தாக்குதல் நடத்த வசதியானதாக அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் இந்த விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பாகிஸ்தானின் இரண்டு யுத்த கப்பல்கள் இலங்கை வந்துள்ளன. இந்த கப்பல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பி.என்.எஸ்.நாசர் மற்றும் காய்பர் ஆகிய இரண்டு கப்பல்களும், நல்லெண்ண நோக்கில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளன.

No comments

Powered by Blogger.