கல்முனைக் கல்வி வலயப் பாடசாளைகளிலிருந்து 237 மாணவர்கள் சித்தி
(ஏ.எல்.ஜுனைதீன்)
கல்முனைக் கல்வி வலயப் பாடசாளைகளிலிருந்து இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரிட்சைப் பெறு பேறுகளின் அடிப்படையில் மொத்தமாக 237 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர் என வலயக் கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது கல்விக் கோட்டப் பாடசாலைகளில் 29 மாணவர்களும் கல்முனை முஸ்லிம் பிரிவு கல்விக் கோட்டப் பாடசாலைகளில் 94 மாணவர்களும் நிந்தவூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளில் 31 மாணவர்களும் கல்முனை தமிழ்ப் பிரிவு கல்விக் கோட்டப் பாடசாலைகளில் 58 மாணவர்களும் காரைதீவு கல்விக் கோட்டப் பாடசாலைகளில் 25 மாணவர்களும் என சித்தி பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் நடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இக் கல்வி வலயப் பாடசாலைகளில் மொத்தமாக 211 மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர்.
இக் கல்வி வலயத்தில் மொத்தமாக 63 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 60 மாகாணப் பாடசாலைகளும் 3 தேசியப் பாடசாலைகளும் அடங்கும்.

Post a Comment