அட்டாளைச்சேனை டீன்ஸ் வீதி கொங்கிரீட் வீதியாக புதுவடிவம்
(அனாசமி)
அட்டாளைச்சேனை 10ம் குறிச்சி டீண்ஸ்வீதி கடந்தகாலங்களில் மழைகாலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த வீதியாகும். இதனைச் செப்பனிட்டுத் தருமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையிடமும், உள்ளுர் அரசியல் வாதிகளிடமும் கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வீதி கொங்கிரீட் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.
நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவியுடன் இவ்வீதிக்கான வேலைகள் தற்போது இடம்பெற்றுவருவதையும், கொங்கிரீட் வேலைகள் இடம்பெறுவதையும் அதன் மறுபகுதியில் கிறவலை சீர்ப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதையும் படங்களில் காணலாம்.
அத்துடன் இவ்வீதி செப்பனிப்படவேண்டுமென பலமுறை ஜப்னா முஸ்லீம் வெப்தளத்தில் பொதுமக்கள் சார்பாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


மிக சந்தோசமான தகவல் .. சேவைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி இதே போன்று அட்டாளைச்சேனை 12ம் பிரிவில் சில வீதிகள் இவ்வாறே மிக மோசமாக இருக்கிறது மழை காலம் வந்தால் வாடிகான்கள் இல்லாமல் எமது மக்கள் மிகவும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள் அதிலும் குறிப்பாக அட்டாளைச்சேனை பொது வீதி மற்றும் குறுக்கு வீதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது .. அது போன்று அப்பகுதயில் வாழும் மக்களுக்கு குடி நீர் இணைப்புகளும் இன்னும் வழங்காமல் இருக்கிறார்கள் இவ்வாறன நேரங்களில் கிணற்று நீர் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது இதையும் உங்கள் கவனத்துக்கு எடுத்து jaffnamuslim இணையத்தில் பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDelete