கடலில் மூழ்கி 16 வயது மாணவன் வபாத்
சீனக்குடா, கருமலையூற்று கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாணவனொருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வெள்ளை மணல் பகுதியை சோந்த 16 வயதான மீராசஹீப் முகம்மது பர்ஹான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இவர் வெள்ளை மணல் அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவராவர். நண்பர்களுடன் கருமலையூற்று கடலில் குளித்துவிட்டு வெளியே வந்த இவர், துவிச்சக்கர வண்டியின் துறப்பு காணாமையினால் மீண்டும் கடலில் இறங்கி தேடிக் கொண்டிருந்த போதே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Tm
Post a Comment