Header Ads



இப்படியும் சில மனிதப்பிறவிகள்..!

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

ஷாமிலா, உம்மா!... உம்மா!... என்று அழைத்தவண்ணம் பாடசாலையில் இருந்து தனது அகதிமுகாமை நோக்கி ஓட்டமும் நடையுமாக கண்ணீரோடு கலந்து வந்துகொண்டு இருக்கின்றாள். வழக்கத்திற்கு மாறாக தன்மகள் நேரத்தோடு பாடசாலையை விட்டு வந்ததும், கண்ணீரால்; முகம் கழுவப்பட்டு இருப்பதையும் கண்ட தாய் ஆசியா திடுக்கிட்டால். உடனே தனது சமையல் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு வாங்க மகள், வாங்க என்னம்மா நடந்தது முகமெல்லாம் வெளிறிப்போயிருக்கு பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது. நேரத்தோட வந்திருக்கிறயே ஏதும் பிரச்சினையா? சேர்மார் யாரும் உன்னை அடிச்சுப்போட்டனரா? என்று விசாரித்தாள்.

ஷாமிலா, இல்லம்மா சேர்மார் யாரும் என்ன அடிக்கல்ல. எல்லா சேர்மாரும் என்னோட ரொம்ப இரக்கம் வச்சிருக்காங்க காலையில நான் பாடசாலைக்குச் சென்றதும் சேர்மார் என்னிடம் அன்பாக 'ஷாமிலா என்ன சாப்பிட்ட' என்று கேட்பது உண்டு. அதற்குக் காரணம் நான் பாடசாலையில் முதல்த்தர மாணவியாக இருப்பதாலாகும். எனச் சொல்லி விட்டு 'இனி நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன் அங்கு போக எனக்கு விருப்பம் இல்லை' எனக்கூறி மீண்டும் அழத்தொடங்கினால் ஷாமிலா.

என்னம்மா நடந்தது என் கண்மணியல்லவா என்ன நடந்தது எண்டு எங்கிட்ட சொல்லு என அன்பாக விசாரித்தாள். 'உனக்கு என்ன வாங்கித்தரல்ல என்னால இயன்றவரை ரேசன் அரிசியைக் கொஞ்சம் வித்துப்போட்டு வாற காசையும், வெங்காயம் வெட்டப்போறதிலயும் வாற காசையும் வைத்து பள்ளிக்குப் போறதுக்குத் தேவையான அவ்வளவு சாமானையும் வாங்கித் தந்திருக்கிறன்' பின்ன என்ன கொற நான் உனக்கு வச்சிருக்கன் சொல்லும்மா. என்ட ஒரே ஆசை, 'எண்ட மகள் பெரியவளாகி ஒரு டொக்டராக வரவேண்டும். அத்தோட சாதிமதபேதமின்றி என் மகள் மனித சமூகத்திற்கு பல்லாண்டு காலம் சேவையாற்றவேண்டும் என்பதேயாகும். எனக்கூறி வாய்மூடவில்லை. ஷாமிலா மௌனத்தைக் கலைத்துவிட்டு பேச ஆரம்பிக்கின்றாள்.

எனக்கு எண்ட உம்மா எந்தக் குறையும் வக்கல்ல. என்ன நல்லா படிக்கவக்கனும், சமூதாயத்தில நல்ல அந்தஸ்தில உசத்தனும் எண்டுதானே நீங்க இந்தக் கடும் வெயிலையும் பாக்காம வெங்காயம் வெட்டப்போறீங்க. எனக்கு ஒரே கவலைதான் நானும் உங்களோட வெங்காயத் தோட்டத்திற்கு வெங்காயம் வெட்ட வரப்போறன் உம்மா எனச்சொல்ல ஆசியா, இல்ல மகள் நீ சின்னப்பிள்ள உனக்கு வாழ்க்கையைப்பற்றி ஒன்றும் தெரியாது உன் பிஞ்சுப் பாதங்கள் அந்த சுடுமணலில் பட நான் விடமாட்டேன் எனக் கூறுகின்றால். மெழுகு திரியைப் பாத்தியா அது எரிந்தால்தான் மத்தவங்களுக்கு வெளிச்சத்தை கொடுக்க முடியும் அதுபோல்தான் நானும்.

ஆசியா தன்மகள் தன்மேல உள்ள பாசத்தாலதான் உம்மாவுக்கு கூடமாட நின்டு உதவி செய்யனும் என்ட நினைப்பிலதான் மகள் பள்ளிக்கூடம் போகமாட்டேங்கிறாள் என மனதுக்குள் நினைச்சுக்கொண்டு பக்கத்து வீட்;டு ஆசிமைக் கூப்பிடுகின்றாள். ஆசிம், பாரு நம்மட ஷாமிலா பள்ளிக்குப்போகமாட்டேன்று அடம்பிடிக்கிறா. என்னண்டு கேட்டா சரியான பதில் சொல்லமாட்டேங்கிறா பெரிய தலையிடியா இருக்கு, எனக்கூற ஆசிம், தாத்தா நான் சொன்னாக் கேப்பா அவ என்கிட்டதானே ஹோம் வேக்கிக்கு உதவி கேட்பது என்மேல மிச்சம் மதிப்பும் மரியாதையும் வைச்சுள்ளா நான் கேட்டா என்னண்டு சொல்லுவா எனும் நம்பிக்கையில் நான் கற்ற கல்வி உளவியலை அசைபோட்டவண்ணம் ஷாமிலாவின் வரவுக்காகக் கட்டிலில் காத்திருக்கின்றான்.

கண்டதும் 'மாமா எப்ப வந்தீங்க' எனக் கேட்டுக் கொண்டு ஆசிமின் அருகில் கிடந்த பின்னலறுந்த கதிரையில் உக்காருகிறாள் இருவரும் உரையாடுகின்றனர்.

ஆசிம், ஷாமிலா இந்தமுற அஞ்சாம் ஆண்டு 2ம் தவணைப்பரீட்சையில யார் முதலாம் பிள்ளை என வினவ என்ன மாமா சந்தேகம் வழக்கம்போல நானேதான் அல்லாட ஒதவியும் ஒங்கட ஒதவியும்தான் எனக்கூற மிச்சம் கவனமா படிக்கனும் புலமைப்பரீட்சையிலும் நீ நல்லா சித்தியடையனும். நீ நல்ல கெட்டிக்காரின்னு என் ஆசிரிய நண்பர் பலர் சொன்னவங்க என்று கூற ஷாமிலா, நான்தான் இனிப்பள்ளிக்குப் போகமாட்டேன் எல்லாம் அந்த வெள்ளிக்கிழமையோடு முடிஞ்சு போச்சு என்றாள்.

ஆசிம், தன் காதுகளை கூராக்கிக் கொண்டான். அதைக் கூறும் போது ஷாமிலாவின் கண்ணில் கசிந்த கண்ணீரையும் அவன் நோட்டமிட்டாமல் இல்லை. உடனே அன்பாக கவர்ச்சியாக ஷாமிலாவிடம் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதற்கான காரணத்தைக் கேக்க ஷாமிலாவும் ஆசிமுக்குக் காரணத்தைச் சொல்லத் தொடங்கினாள்.

வழக்கம் போலத்தான் மாமா காயக்குழி பள்ளிக்கூடத்துக்குப் போறது. வகுப்புல முதலாம் புள்ளயாவருவதாலும், மாணவத்தலைவியா இருப்பதாலயும் மத்தப்பிள்ளைகளுக்கு என்மேல பொறாமை அதனால,  என்மேல அவர்களுக்கு வெறுப்பு எனச் சொல்லி விட்டு  அழுகின்றாள். மீண்டும் ஆசிம் அவளை ஆறுதல் படுத்திவிட்டு கதையைத் தொடர்கிறான். என்னை மாமா பிள்ளைகள் 'அகதிநாய்' எனப்பட்டம் சூட்டி கூப்பிடுதுகள். எனக்கு ஒதவிக்கு யாருமேயில்ல. நான் தனிமைப்பட்டு உள்ளதாக உணர்கின்றேன். எனச் சொல்ல இதை ஏன் சேர்மாரிடம் சொல்லல்ல என ஆசிம் கேட்க பிரச்சினை பெரிசாயிடும்னு சொல்லல்ல என்றாள் ஷாமிலா.

உடனே ஆசிம் தனக்குள்ளே கூறிக்கொள்கின்றான் என்ன சமூகம்! இந்தப் பிஞ்சு எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கு இது காலப்போக்கில இப்பிள்ளையின் வாழ்வில் ஆளுமையைப் பாதிக்கும் என்று கவலை கொள்கின்றான். எனினும், காரணத்தைக் கண்டு பிடித்த திருப்தியுடன் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இடம் பெயர்ந்தவர்களை முஜாஹிரீன் என எவ்வளவு அழகாக அழைக்கச் சொல்ல இங்கு அகதி நாய்கள் என அழைக்கின்றனரே. நபி இன்று உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என மனதுள் யோசித்துக் கொண்டு அப்படி அழைக்க அப்பிள்ளைகளின் பெற்றோர்தான் காரணமாக இருந்து இருப்பர் எனத் தீர்மானித்துக் கொண்டான்.

ஷாமிலா இடத்தைவிட்டகல தம்பி விசயத்தைக் கண்டுபிடிச்சிட்டிங்களா? ஏனக் கேட்க, ஆசிம் காரணத்தைக் கூற ஆசியா மயங்கி கீழே விழுகின்றாள். பக்கத்து வீட்டு பாத்திமா ஓடி வந்;து நீர் தெளிக்க மயக்கம் தெளிந்து பேசத்தொடங்குகிறாள் 'நாங்களும் கல் வீட்டில வாழ்ந்தவங்கதான். எங்கிட்டயும் காறும், கடையும் இருந்தது வீடு நிறைய சம்பா நெல் வச்சுச் சாப்பிட்டு வந்தவங்கதான். எல்லாம் காலம் செய்த கோலம். எங்கள் ஆண்டவன் சோதிக்க நினைச்சு அந்த மண்ணை விட்டே வெறுங்கையோட போகச்செய்திட்டான். யார் செய்த பாவமோ? ஷாமிலாட வாப்பாவும் டவுன்ல பெரும் இரும்புக்கடை வச்சிருந்தவருதான். யாரோ ரெண்டுபேர் ஒரு இரவு துவக்குகளோடு வந்து அவரை விசாரிக்கனும் என்டு சொல்லிக் கூட்டிட்டுப்போனவங்கதான். இன்னுமே அவரைப்பற்றி ஒரு தகவலும் தெரியாது எனக்கூறி கண்ணீர் விட்டாள். பாவம்! வாழவேண்டியவள் பூவிழுந்து வாழாவெட்டியாக ஆசியா ஆணாக உழைப்பதை எண்ணி ஆசிம் மனதுக்குள் வேதனைப்பட்டான்.

தாய் அழுதழுது சொன்ன யாவையும் கதவோரம் நின்று ஷாமிலா மிகவும் அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். தனது தந்தை என்ன ஆனார். நாம் எப்படி இந்த ஊருக்கு வந்தோம் போன்ற தகவல்களை அந்தப்பிஞ்சு உள்ளம் அறிந்து கொண்டது. தாயின் எதிர்பார்ப்பு மாமா ஆசிமின் பக்கபலம் போன்றவற்றால் மீண்டும் பாடசாலை செல்ல ஆரம்பித்தால். திட்டமிட்டபடி பள்ளி சென்று வரலானாள். யார் என்ன பேசினாலும் அவள் அதைப் பொருட்படுத்துவதில்லை. இப்போதெல்லாதம் படிப்பிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சையும் வந்து பரீட்சைப் பெறுபேறும் வெளியாகியது. புத்தள மாவட்டத்திலேயே மிகவும் கூடுதலான புள்ளியை ஷாமிலா பெற்றாள். இதையறிந்த தாய் எங்கள அல்லாஹ் கைவிடமாட்டான் என்றாள்.

புவிக்கோளம் சுழன்றது ஷாமிலாவிற்கு கண்டி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் கல்வி பயிலும் வாய்ப்புக்கிடைத்தது. அங்கும் ஷாமிலா தன் திறமையைக்hகட்டத்தவறவில்லை. க.பொ.த (சா.த), க.பொ.த (உ.த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்;று பாடசாலைக்கு புகழை ஈட்டிக் கொடுத்துவிட்டு பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு மருத்துவப்பிரிவுக்குத் தெரிவு செய்யப் படுகிறாள். அங்கும் தன் படிப்பைச் சிறப்பாகப் பூர்த்தி செய்துவிட்டு ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணியாக கற்பிட்டி வைத்தியசாலைக்கு நியமனம் பெறுகிறாள். ஷாமிலா தன் தொழிலைப் பாரமெடுக்கு முன்பு தன் தாயிடமும் ஆசிம் மாமாவிடமும் ஆசிர்வாதம் பெறுகின்றாள்.

தாய் சொல்கிறாள் என்ட அவாவை அல்லாஹ் நிறைவேத்திட்டான். எல்லாப்புகழும் அவனுக்கே மகள் நீpங்க எண்டைக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் சகோதர ஒற்றுமைக்கு பாலமாக இருக்கவேண்டும் என்று. ஷாமிலா ஆம் எனத் தன் தலையை அசைக்கிறாள்.

ஷாமிலா சத்திரசிகிச்சை நிபுணியாக நியமிக்கப்பட்டதை அறிந்து அவளை ஏளனம் செய்த ஆரம்ப வகுப்பு மாணவ கும்பல் பெரிய பரிசுப் பொருட்களுடன் அவளைச் சந்திக்க மருத்துவ மனைக்கு வந்திருந்தனர். அவர்களைக் கண்டும் காணாமல் ஷாமிலா தன் கடமையிலேயே கண்ணாக இருந்தாள். பல மணி நேரம் காத்திருந்தும் அவர்களால் ஷாமிலாவைச் சந்திக்க முடியவில்லை. ஓவ்வொருவரின் மனச்சாட்சியும் பேசத்தொடங்க ஒருவர்பின் ஒருவராக இடத்தை விட்டு அகன்றனர்.

விர் என்ற இரைச்சலுடன் ஓர் அம்பியுலன்ஸ் வண்டி மருத்துவ மனையினுள் நுழைந்தது. உடனே உஷாரான ஷாமிலா, நேர்ஸ் சொல்வது கேட்கிறது. சத்தார் என்னும் ஒருவராம் பஸ் மோதியதால் ஏற்பட்ட காயம் மிச்சம் சீரியசாம் என்று. நோயாளியை உடனே விஷேட பிரிவுக்குக் கொண்டு செல்லுமாறு ஷாமிலா கட்டளையிட்டாள். ஷாமிலா அறுவைச் சிகிச்சை செய்வதற்கு தயாராகி பி பொசிடிவ் இரத்தம் ஒரு பைந்து தயார் செய்யுமாறும் கூறினாள். மருத்துவ மனையின் இரத்த வங்கியிலும் அந்த குறூப் இரத்தம் இல்லை என்ற தகவலை அறிந்த ஷாமிலா தனது உடலில் இருந்து ஒரு பைந்து இரத்தம் எடுக்குமாறு கூறி பின்பு ஷாமிலாவின் இரத்தம் சத்தாரின் இரத்தத்தோடு கலக்கிறது. சத்தார் கண் விழிக்கின்றான். நன்றி கூறுகிறான். ஷாமிலா எவ்விதப் பெருமிதமும் இன்றி புன்னகை;கின்றாள்.

ஷாமிலா இரத்தம் வழங்கிக் காப்பாற்றிய சத்தார்தான் அவளை அகதி நாய் என அடிக்கடி கேலி செய்தவன். சத்தாரைக் காப்பாற்ற இரத்தம் கொடுத்தவர் டொக்டர் ஷாமிலா என்பதை அறிந்த அந்த பழைய நண்பர் கூட்டம் நன்றியும் கூறி பழயதை மறக்கும் படியும் கூறியது. டொக்டர், நினைத்தால் தானே மறப்பதற்கு என்று அவர்களின் பழைய வகுப்புத்தோழியாக புன்னகை செய்தாள். அப்போது அந்த நண்பர்களில் இருவர் பேசிக்கொள்கின்றனர். ஷாமிலா ஷாமிலாதான் என்று இப்படியும் சில மனிதப் பிறவிகள் என்று கடற்கரைக்காற்று மெதுவாக காதில் கூறிச் சென்றது.

யாவும் கற்பனை

No comments

Powered by Blogger.