ஏறாவூரில் இரத்த தான நிகழ்வு
(அபூ பயாஸ்)
ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் ஏற்பாட்டில் ஏறாவூர் அல் அஷ்கர் பெண்கள் உயர்தர பாடசாலையில் இன்று காலை 09.00 மணி தொடக்கம் 02.00 மணி வரை இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.
இரத்த தானத்தை பெற்றுக்கொள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய குழுவினர் வருகை தந்தனர்.
ஏறாவுரின் ஆண்கள்,பெண்கள் என 118 பேர் இரத்த தானம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆறு மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான இரத்த தான நிகழ்வை ஏறாவூர் இன்போ,நல்லிணக்கம் மற்றும் வலுவூட்டலுக்கான நிலையம் ஆகியன இணைந்து நடாத்தி மக்களுக்கான விழிப்பூட்டல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment