Header Ads



குர்பான் கொடுப்பதற்காக 16 இலட்சம் ரூபாய்க்கு விலைபோன ஒட்டகம்

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத்தை ஒட்டி, ஆடு, மாடு, ஒட்டகங்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள், பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின் போது, பலியிடப்படும் விலங்குகள், அதிக அளவில் விற்பனை செய்யப்படும். சாதாரண நாட்களை விட, ஆடு, மாடு, ஒட்டகங்களின் விலை, அன்றைய தினம் சற்று அதிகரிக்கும். 

இந்நிலையில், இந்த ஆண்டு, பலியிடப்படும் விலங்குகளின் தேவை அதிகரித்ததால், வரலாறு காணாத விலை ஏற்றம் காணப்பட்டது. ஒரு ஆடு, 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போனது. அதே போல், ஒரு மாட்டின் விலை, ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும், ஒரு ஒட்டகத்தின் விலை, 16 லட்சம் ரூபாய் வரையிலும் ஏற்றம் காணப்பட்டது. 

இந்த விலை ஏற்றத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு ஆன் லைன் விற்பனை நிறுவனங்களும், விலங்குகள் விற்பனையை தொடங்கின. 

பிரபல கிரிக்கெட் வீரர், இம்ரான்கான் , ஒரு லட்சம் ரூபாய்க்கு, பலி ஆடு ஒன்றை விலைக்கு வாங்கினார். இது காணாமல் போனதாக தகவல்கள் வெளியானது. 

இதே போல், பலரும் அதிக விலை கொடுத்து வாங்கிய விலங்குகளை பாதுகாக்க பெரிதும் போராடினர். "இந்த விலை ஏற்றம் முன் எப்போதும் இல்லாதது' என, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தானில், ஏழு லட்சம் ரூபாய்க்கு, சொகுசு கார் வாங்கி விட முடியும் என்ற சூழ்நிலையில், பக்ரீத்துக்கு பலி கொடுப்பதற்கான ஒட்டகம், 16 லட்சம் ரூபாய்க்கு விலை போனது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், தனிக்குடித்தனம் நடத்தும் பலரும், உறவினர்களுடன் ஒன்று கூடி, கூட்டுக் குடும்ப முறையில், ஒன்றாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஒரு பலி விலங்கிற்கு ஆகும் செலவையும் பகிர்ந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.