Header Ads



ஹஜ் பெருநாள் தொழுகையின் போது பள்ளிவாசலுக்கு வெளியில் குண்டுவெடிப்பு - 12 பேர் வபாத்

வடக்கு ஈராக் நகரான கிர்குக்கில் 15-10-2013 ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின் போது பள்ளிவாசலுக்கு வெளியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 22 பேர் காய மடைந்தனர்.

தொழுகை முடிந்து வெளியேறியோரை இலக்கு வைத்தே இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈராக்கில் தொடரும் சுன்னி, ஷியா பதற்றம் காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 6000 பேரளவில் கொல்லப்பட்டுள்ளனர். எண்ணெய் வளம் கொண்ட கிர்குக்கில் அரபிக்கள், குர்திக்கள் மற்றும் துர்க்மன்கள் கலந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.