பிறப்பிலேயே பார்வைக் குறைபாடுடைய மாணவன் 157 புள்ளி பெற்று சித்தி
பிறப்பிலேயே பார்வைக் குறைபாடுடைய (Low Vision) யாழ்.கோப்பாய் மகா வித்தியாலய மாணவன் சந்திரகுமார் அமலஅசாம் புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து வாழ்க்கையில் சாதிக்க உடல் குறைபாடு ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
இவர் தனது விடா முயற்சியும் ஊக்கமும் ஆசிரியர் திருமதி பி.ஸ்ரீபரமேஸ்வரன் மற்றும் அதிபர் ரி.ஞானப்பிரகாசம் ஆகியோரது வழிகாட்டலுமே தனது இந்த சாதனைக்கு துணை நின்றதாக மகிழ்ச்சியோடு தெரிவக்கிறார் இந்த மாணவன்.
Post a Comment