Header Ads



எகிப்து குறித்த சவூதி அரேபிய நிலைப்பாட்டுக்கு அந்நாட்டு இளவரசர்கள் அதிருப்தி

(Tn) எகிப்தின் இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தது குறித்து சவூதி அரேபியாவின் பல இளவரசர்களும் அதிருப்தியுடன் இருப்பதாக அரச குடும்பத்தின் நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அஸ்ரர் அரேபியா என்ற இணையதளம் வெளியிட்ட செய்தியின்படி சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் அப்துல் அkஸ், எகிப்து இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தது மற்றும் நிதியுதவி வழங்கியது குறித்த சவூதியின் நிலைப்பாட்டுக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் ஆதரவு அந்நாட்டு கருவூலத்தில் பாரிய இழப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாது சர்வதேச அளவில் நாட்டின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக முடிக்குரிய இளவரசர் நம்புவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதலாவது ஜனாதிபதியான மொஹமட் முர்சியை பதவி கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சிக்கு சவூதி அரேபியாவுடன் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜோர்தான் போன்ற பிராந்திய நாடுகள் தனது ஆதரவை வெளியிட்டிருந்தன.

No comments

Powered by Blogger.