Header Ads



நன்றி சொல்கிறார்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த வாக்காள பெருமக்களே.

நேற்றுவரை உங்களில் ஒருவனாக, சாதாரண மனிதனாய் வாழ்ந்த என்னை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட மாகாண சபைக்கு உரிமை குரள் எழுப்பி எம் இனத்தின் விடயலை நோக்கிய வெற்றிப் பாதைக்கு தேர்ந்தெடுத்த என் இதய நெஞ்சங்களே முதலில் அல்லஹ்வுக்கும், அடுத்து உங்களுக்கும் நன்றி எனும் நல் வார்த்தை கூறி நிற்கின்றேன்.

உங்களின் வெற்றி நாயகன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னால் அமைச்சரான மறைந்த மன்னாரின் மாமனிதர் மர்ஹூம் நூர்தீன் மஷூர் அவர்களின் கனவை நனவாக்க தேர்ந்தெடுத்த உங்களின் கனவுக் கதாநாயகன் ரயிஸ் ஆகிய நான் அன்புக்கரம் காட்டி அழைத்து நேசக்கரம் நீட்டி உங்களின் பொண்ணான இரு கரங்களை பற்றிப் பிடித்தவனாக எழும் மனம் குளிர்ந்த நன்றிகள் பல்லாயிரத்தை உங்களுடன் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தகவல்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எருக்கலம்பிட்டி செயலாளர்
ஆ.து. ஷாஹின் ரிஷா

1 comment:

  1. நீங்களாவது எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தை முன்னேற்றமடையச் செய்வதற்கான வழிவகைகளைப் பாருங்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.